;
Athirady Tamil News

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி கடிதங்கள்: பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு

0

சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த கடிதம் மஞ்சள் பின்னணியில் நீல நிற பொலிஸ் கையொப்பத்துடன் பொலிஸ் உத்தியோகபூர்வ சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், 2024 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி வெளியிடப்பட்டதாகத் தோன்றும் வகையில் இந்த கடிதம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இக்கடிதமும் அதன் உள்ளடக்கமும் முற்றிலும் போலியான கடிதம் எனவும், இலங்கை பொலிஸாரோ அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களினாலோ இவ்வாறான கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் போலி கடிதம் மற்றும் இணையத்தில் கடிதம் பிரசுரம் செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.