;
Athirady Tamil News

உங்கள் இரண்டு பேரை விட்டால் ஆளே இல்லையா? பிரதமர் வேட்பாளர்களைக் கேள்வி கேட்ட பிரித்தானிய குடிமகன்

0

பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கு இன்னமும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையிலான விவாத நிகழ்ச்சி ஒன்றின்போது, பிரித்தானியாவை ஆள உங்கள் இரண்டுபேரை விட்டால் வேறு ஆளே இல்லையா என குடிமகன் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதம்

பிரித்தானியாவில், வியாழக்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், லேபர் கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என கணித்துள்ளன.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையிலான விவாத நிகழ்ச்சி ஒன்றின்போது, கன்சர்வேட்டிவ் கட்சியின் ரிஷி சுனக்கும், லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.

ரிஷி, புலம்பெயர்தலை எப்படி ஸ்டார்மர் கட்டுப்படுத்தப்போகிறார் என கேள்வி எழுப்ப, ஸ்டார்மரோ, ரிஷி ஒரு பணக்காரர், ஏழைகளின் கஷ்டம் அவருக்கு புரியாது என பர்சனலாக ரிஷியைத் தாக்கினார்.

ரிஷி, லேபர் கட்சியிடம் சரணடைந்துவிடவேண்டாம் என கேட்க, ஸ்டார்மரோ, 14 ஆண்டுகள் ஆண்ட கன்சர்வேட்டிவ் கட்சியிடமிருந்து நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவை, மாற்றத்துக்கு எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்றார்.

உங்கள் இரண்டு பேரை விட்டால் ஆளே இல்லையா?

இப்படி மாறி மாறி இருவரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டே இருக்க, விவாத நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்ற ஒருவருக்கு எரிச்சல் கட்டுமீறிப்போய்விட்டது.

பிரித்தானியாவை ஆள, உங்கள் இரண்டு பேரை விட்டால் வேறு ஆளே இல்லையா என் அவர் கேள்வி எழுப்ப, கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பி அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

எப்படியும், இன்னும் ஒரு நாள், அதன்பின், மக்கள் பிரித்தானியாவை யாரிடம் ஒப்படைக்கப்போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.