;
Athirady Tamil News

கசாப்புக்கடைக்குள் நுழைந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் செய்த செயல்: பொலிசார் நடவடிக்கை

0

சுவிட்சர்லாந்தில், கசாப்புக்கடை ஒன்றிற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விலங்குகள் நல ஆர்வலர்களை வெளியேற்ற, பொலிசாரை அழைக்கும் நிலை ஏற்பட்டது.

கசாப்புக்கடைக்குள் நுழைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள்
சுவிட்சர்லாந்தின் Fribourg நகரிலுள்ள கசாப்புக்கடை ஒன்றிற்குள், விலங்குகள் நல ஆர்வலர்கள் 269 பேர் நுழைந்து, அங்கிருந்த கருவிகளுடன் தங்களை சங்கிலியால் பிணைத்துக்கொண்டார்கள்.

10 மணி நேரத்துக்கும் கூடுதலாக இந்த போராட்டம் நீடித்தது. விடயம் என்னவென்றால், அந்த கசாப்புக்கடையை நடத்தி வருபவர், மற்றொரு கசாப்புக்கடையைத் திறக்க திட்டமிட்டுள்ளார். அவரது கசாப்புக்கடையில், ஆண்டொன்றிற்கு 31 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டு, உணவுக்காக பதப்படுத்தப்படுகின்றன.

ஆகவே, அவர் புதிதாக ஒரு கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, விலங்குகள் நல ஆர்வலர்கள் அவரது கடை ஒன்றிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். என்றாலும், பொலிசார் வந்து அவர்களை அனைவரையும் அப்புறப்படுத்தினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.