ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு: 9 பேர் காயம்
ஜேர்மனியிலுள்ள காபி ஷாப் ஒன்றில் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது ஆசிட் வீசியதில், 9 பேர் காயமடைந்துள்ளார்கள்.
ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு
நேற்று, அதாவது, ஜூன் மாதம் 1ஆம் திகதி, மதியம் 3.25 மணியளவில், ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Bochum நகரில் அமைந்துள்ள காபி ஷாப் ஒன்றில் நுழைந்த ஒருவர், அங்கு காபி அருந்திக்கொண்டிருந்த ஒருவர் மீது ஆசிட் வீசியுள்ளார்.
ஆசிட் வீசப்பட்ட நபர் படுகாயம் அடைய, பணிப்பெண் ஒருவர் மற்றும் காபி ஷாப்புக்கு வந்த ஒரு பெண் மீதும் ஆசிட் பட்டுள்ளது. அத்துடன், தகவலறிந்து அங்கு வந்த நான்கு பொலிசார் மற்றும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 9 பேர் ஆசிடால் காயமடைந்துள்ளார்கள்.
ஆசிட் வீசியவர் தப்பியோடிவிட்டாலும், சிறிது நேரத்திற்குள் பொலிசார் அவரைக் கைது செய்துவிட்டார்கள். அவர் எதற்காக ஆசிட் வீசினார் என்பது தெரியாத நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.