பிரேசில் வெள்ளம்: மாயமான 33 பேர், தொடரும் சீரமைப்புப் பணி!
90 சதவிகிதம் அளவுக்கு பாதிப்படைந்த பிரேசிலின் தெற்கு மாநிலமான க்யூ கிராண்ட் டு சுல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 179 பேர் உயிரிழந்ததாகவும் குறைந்தது 33 பேர் காணாமல் போனதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 29 இல் தொடங்கிய எதிர்பாராத பேரிடரால் 23.9 கோடி பேர் பாதிக்கப்பட்டதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பேரழிவின் உச்சமாக 4,50,000 இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தின் இடையில் வெள்ளநீர் வடிய தொடங்கியதால் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்துவருகின்றன. குறிப்பாக நகர வடிகால் அமைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. போர்டா அல்கிரே பகுதியில் கைபா ஆற்றுவெள்ளம் மீண்டும் தாக்கியது.
க்யூ கிராண்ட் டு சுல் சீரமைப்புக்காக பிரேசில் அரசாங்கம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கியுள்ளது.
ஆர்ஜெண்டினா மற்றும் உருகுவே எல்லையில் அமைந்துள்ள க்யூ கிராண்ட் டு சுலில் விவசாயம் மற்றும் மின்நிலையங்களை சார்ந்துள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட 89 ஆயிரம் மக்கள் மற்றும் 15 ஆயிரம் விலங்குகள் ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.