ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி – கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கு மேற்பட்டோர் பலி
உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
உத்திர பிரதேசம்
உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ், சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத்சங்கம் சங்கம் சார்பில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது 5000 க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விழா முடிந்து கிளம்பும் பொது பலர் முண்டியடித்து கொண்டு வெளியேறி உள்ளனர். குறுகலான பாதையில் பலரும் சென்றதால் நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்துள்ளார்.
இரங்கல்
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 க்கு மேற்பட்டோர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில் எட்டாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை களத்திற்கு சென்று விரைவாக நிவாரண பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
यूपी में हाथरस के फुलरई गांव में भोले बाबा के सत्संग में भगदड़ के कारण बड़ा हादसा. प्राप्त जानकारी के मुताबिक हादसे में लगभग 30 श्रद्धालुओं की मौत हो गई है. #Hathras #UttarPradesh pic.twitter.com/xqoKf3vkRf
— Sarkarihelpline.com (@SarkariHelpline) July 2, 2024