ஒரு ரூபாய் வரதட்சணையாகக் கேட்ட மாப்பிள்ளை: காரணம் என்ன தெரியுமா!
இந்தியாவில் (India) திருமண நிகழ்வு ஒன்றில் ஒரு ரூபாவை வரதட்சணையாகக் கேட்ட மாப்பிள்ளை பற்றிய தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவமானது இந்தியா, ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்விலேயே இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திருமணம் முடிவடைந்த பின்னர் மணமகன் ஒருவர் தனக்கு வரதட்சணை வேண்டாம் எனவும், தேங்காயும் ஒரு ரூபாயும் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.
மணமகனுக்கு வாழ்த்து
இந்த செயலை பார்த்த பொதுமக்கள் குறித்த மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மணமகன் கருத்து தெரிவிக்கையில், தனது மனைவியை அவரது பெற்றோர்கள் நன்றாக வளர்த்துள்ளதாகவும் அவரை நன்றாக படிக்க வைத்ததே தனக்கு மிகப்பெரிய வரதட்சணை எனவும் தெரிவித்திருக்கிறார்.
வரதட்சணை என்ற தீய பழக்கம்
அத்துடன், வரதட்சணை என்ற தீய பழக்கத்தை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கிலேயே அவர் இதனைக் கடைப்பிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனைவிக்கு அரசு வேலைக் கிடைத்தால் ஒரு வருட சம்பளத்தை மனைவியின் பெற்றோருக்கே கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
மணமகனின் இந்தசெயல் சிகார் மாவட்டத்தை பெரிதும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.