;
Athirady Tamil News

கிளிநொச்சியில் பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள், அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறை!

0

“பால் மற்றும் பால்நிலை வன்முறை(SGBV) தொடர்பான முறைப்பாடு முறைமைகள், அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு” எனும் தலைப்பிலான ஒரு நாள் செல்லுபடியாக்கல் பயிற்சிப்பட்டறை நேற்று (02) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குறித்த பயிற்சிப்பட்டறை கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வடக்கு மாகாணத்தில் கிறிசலிஸ் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் “பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல்” கருத்திட்டத்தின் ஓர் அம்சமாக குறித்த பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இப் பயிற்சிப் பட்டறையினை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இக் கருத்தரங்கில் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் பெண்கள் பிரிவுகளின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், கிறிசலிஸ் நிறுவன திட்ட முகாமையாளர் , சிரேஷ்ட திட்ட இணைப்பாளர், கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், கிளிநொச்சி குடிசார் சம்மேளன பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என தெரிவு செய்யப்பட்ட 40 பேர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.