;
Athirady Tamil News

பிரான்சில் வலதுசாரிக் கட்சியின் வெற்றியால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தினர்

0

பிரான்சில் முதல் சுற்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வலதுசாரிக் கட்சி ஒன்று முன்னிலை வகிப்பதால், இஸ்லாமியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சி முன்னிலை
பிரான்சில் முதல் சுற்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், National Rally கட்சி முன்னிலை வகிக்கிறது. National Rally கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கை கொண்ட கட்சியாகும். அக்கட்சியின் தலைவரான Marine Le Pen, பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது கட்சியின் பிரதமர் வேட்பாளரான Jordan Bardella, சில அரசுப் பணிகளை இரட்டைக் குடியுரிமை கொண்டோர் செய்வதற்கு தடை விதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வலதுசாரிக் கட்சிக்கு மக்கள் ஆதரவா?
இந்நிலையில், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சி தேர்தலில் முன்னிலை வகிப்பது இஸ்லாமியர்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.

முதல் சுற்று தேர்தலிலேயே National Rally கட்சிக்கு 10.6 மில்லியன் மக்கள் வாக்களித்திருப்பார்களானால், இரண்டாவது சுற்று முடிந்தால் என்ன ஆகும் என இப்போதே இஸ்லாமியர்கள் பயப்படத் துவங்கிவிட்டார்கள்.

இதற்கிடையில், National Rally கட்சி வெற்றி பெறுமானால், பிரான்சை விட்டே வெளியேற இஸ்லாமியர்கள் பலர் திட்டமிட்டுவருவதாகவும், சிலர் ஏற்கனவே அமைதியாக வெளியேறிவிட்டதாகவும், சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.