;
Athirady Tamil News

ஐக்கிய அரபு அமீரகத்தில் லொட்டரியில் ரூ.22 கோடி வென்ற இந்தியர்!

0

அபுதாபி Big Ticket லொட்டரியில் இந்தியர் ஒருவர் 22 கோடி ரூபாய்க்கு மேல் (10 மில்லியன் திர்ஹாம்) வென்றுள்ளார்.

துபாயில் வசிக்கும் இந்தியரான ரைசூர் ரஹ்மான் (Raisur Rahman Anisur Rahman), ஜூன் 15 அன்று, Big Ticket-ன் 264-வது டிராவில் கலந்துகொண்டு, 078319 என்ற டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

இப்போட்டிக்கான குலுக்கல் ஜூலை 3-ஆம் திகதி நடந்தது. அப்போது, ரைசூர் ரஹ்மான் வாங்கிய டிக்கெட்டிற்கு டிராவின் முதல் பரிசான 10 மில்லியன் திர்ஹம்ஸ் (AED) அதிர்ஷ்டம் அடித்தது.

பணியிடத்தில் மீட்டிங்கில் கலந்து கொண்டதால் டிராவை நேரலையில் பார்க்க முடியவில்லை என்று கூறிய ரைசூர் ரஹ்மான், காரில் சென்றுகொண்டிருக்கும்போது, பிக் டிக்கெட் அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறினார்.

காரை நிறுத்தி பேசும்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர்களான ரிச்சர்ட் மற்றும் பௌச்ரா ஆகியோர் பேசியதாகவும், தனக்கு ஜாக்பாட் அடித்திருப்பதை விவரித்ததாகவும், அச்சமயத்தில் தனக்கு கிடைத்த மகிழ்ச்சி விவரிக்க முடியாதது என்று கூறினார்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரைசூர் ரஹ்மான் தனியாக டிக்கெட் வாங்கி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.