;
Athirady Tamil News

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்பு

0

பிரித்தானியாவில் காணாமல் போன இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் Ipswich-சில் குடும்பத்துடன் வசித்து வந்த மலையாளியான வைத்தியர் ராமசாமி ஜெயராம் (56) இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 30-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.45 மணிக்கு ராமசாமி வீட்டில் இருந்து வெளியே சென்று பின்னர் காணாமல் போனார்.

ஜூலை 1 முதல், அவரைக் கண்டுபிடிக்க Suffolk பொலிஸ் உதவி கோரியது. ஆனால் தேடுதல் முடிவில் ராமசாமியின் சடலமாக கிடைத்தார்.

இந்த மரணத்தில் சந்தேகத்திற்கு இடமில்லை என காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ராமசாமியின் மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ராமசாமியின் சாம்பல் நிற Citroën C1 கார் Ipswich-ன் Ravenswood பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து Suffolk Lowland Search and Rescue மற்றும் பிரித்தானியாவின் HM Coastguard-ன் உதவியுடன் Orwell Country பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.

பொலிஸார் தேடுதல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு, பலர் தங்கள் சமூக ஊடக கணக்குகள் மூலம் அறிவிப்பை பகிர்ந்து கொண்டனர். இதனால், ராமசாமியை கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை பெரும்பாலானோருக்கு இருந்தது.

ஆனால், நேற்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 9.25 மணியளவில் Braziers Wood பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.