இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்தர மாணவுகளின் பெறுபேறுகள் வெளியானது
திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது.
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை
இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்திருந்தனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அதனடிப்படையில் மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.