உக்ரேனிய போர் விமானத்தை அழித்துவிட்டோம் – ரஷ்யா
விமானப்படை தளத்தில் உக்ரேனிய விமானத்தை அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கஜகஸ்தான் பயணம்
ரஷ்யா, உக்ரைன் இடையிலான சண்டை நீடித்து வரும் நிலையில் விளாடிமிர் புடின், பிராந்திய முகமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க கஜகஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் டெலிகிராம் செய்தி சேவை உக்ரைன் நடத்திய தாக்குதலை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று, ரஷ்ய எல்லையில் இருந்து 150 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மிர்கோரோட் அருகே உள்ள தளத்தில், 5 உக்ரேனிய Su-27 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
போர் விமானத்தை அழித்ததாக
ஆனால், விமானப்படை தளத்தில் தாக்குதலின்போது மிக்-29 போர் விமானத்தை அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்கந்தர் பாலிஸ்டிக் ஏவுகணையால் தாக்கப்பட்ட Dolgintsevo-யில் உள்ள தளத்தில் ஜெட் மற்றும் பிற உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
கீவ் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளிடம் இருந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட F-16 போர் விமானங்களின் விநியோகத்திற்காக காத்திருக்கிறது.
அவர்கள் நிலைநிறுத்தப்படும் தளங்களைப் பாதுகாப்பது உக்ரைனுக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் ஒரு முக்கிய சவால் என்பது குறிப்பிடத்தக்கது.