திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ள ஜேர்மனியின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி MP
ஜேர்மனியின் முதல் ஆப்பிரிக்க பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
ஆப்பிரிக்காவில் பிறந்து ஜேர்மனியில் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் நபரான Karamba Diaby (62) என்பவர் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தான் தன் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட விரும்புவதாகவும், இளைய தலைமுறையினருக்கு வழிவிடுவதற்காகவும் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையான காரணம் என்ன?
ஆனால், அவர் பதவி விலகுவதன் பின்னணியில் வேறொரு காரணம் உள்ளது. அதாவது, Karambaவுக்கு அவரது அலுவலக ஊழியர்களுக்கும் தொடர்ந்து இனவெறுப்புச் செய்திகள் அனுப்பப்படுவதுடன், கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுவந்துள்ளன.
மேலும், இனரீதியாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட Karambaவின் அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டதுடன், யாரோ ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுடும் சம்பவங்களையும் அவரும் அவரது அலுவலர்களும் எதிர்கொண்டுவந்துள்ளார்கள்.
ஆகவேதான் Karamba தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.