;
Athirady Tamil News

காசாவில் சிறுவர்களிடையே பரவும் நோய்த்தாக்கம் : எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

0

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக முறையான உணவு, ஊட்டச்சத்து இன்றி அவதிப்படும் சிறார்கள் தற்போது தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக MSF மருத்துவ ஒருங்கிணைப்பாளரான முகமது அபு முகைசீப் (Mohammed Abu Mughaiseeb) தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், சுமார் 150,000 பேர் பல்வேறு தோல் வியாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சுகாதாரப் பொருட்கள்
சிரங்கு, சின்னம்மை, பேன், கொப்புளங்கள் ஏற்படும் ஒருவகை தோல் வியாதி மற்றும் பலவீனப்படுத்தும் சொறி வரை பரவுவதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

வெறும் தரையில் மண் மீது படுத்துறங்கும் நிலை இருப்பதால், இதுபோன்ற தோல் வியாதிகள் ஏற்படுவதாகவும், முன்பு போல தற்போது தங்கள் பிள்ளைகளை குளிக்கச் செய்ய முடியாமல் போயுள்ளது என்றும், தாங்கள் வசிக்கும் இடம் சுத்தமாக இல்லை என்றும் கழுவி சுத்தம் செய்யும் வகையில் எங்களுக்குச் சுகாதாரப் பொருட்களும் இல்லை என பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, மத்தியதரைக் கடலில் குளித்து சுத்தமாக இருக்க பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். கடலும் தற்போது கழிவுகளால் அசுத்தமாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், காஸா போர் தொடங்கிய பின்னர் சிரங்கு மற்றும் பேன் காரணமாக 96,417 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சின்னம்மையால் 9,274 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தோல் தடிப்புகளால் 60,130 பேர்களும் கொப்புளங்களால் 10,038 பேர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கரையோர பாலஸ்தீன பிரதேசத்தில் சிரங்கு மற்றும் சின்னம்மை நோய் வேகமாக பரவுகிறது என உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.