ஜப்பானில் புதிய வடிவமைப்பில் நாணயத்தாள் அறிமுகம்!
ஜப்பான் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக பாவனையில் இருந்த நாணயத்தாள்களின் வடிவமைப்பை விட புதிய வடிவமைப்பில் நாணயத்தாள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, போலி நாணயத்தாள்களை அடையாளம் காணும் அம்சங்களும், வரலாற்றுச் சாதனையாளர்களின் படங்களும் புதிய நாணயத்தாளில் இணைக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அதன் பின்புறத்தில் டோக்கியோ விமான நிலையம், wisteria மலர்கள், ஃபுஜி மலையின் பிரபல ஓவியம் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
மேலும், வயதானோர் எளிதில் படிக்கும் வகையில் அனைத்தும் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நாணயத்தாள் முதலில் வங்கிகளுக்கும் நிதி நிலையங்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.