;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன Number Plate

0

சுவிட்சர்லாந்தில், Number plate ஒன்று, சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

அதிக தொகைக்கு ஏலம் போன Number Plate
இதற்கு முன், 2018ஆம் ஆண்டில், Zug மாகாணத்தில், ZG 10 என்னும் எண் கொண்ட Number plate 233,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதற்குப் பின், 2022ஆம் ஆண்டு, சூரிச் மாகாணத்தில் ZH 100 என்னும் Number plate, 226,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

தற்போது, ZH 24 என்ற எண் கொண்ட Number plate, 299,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மதிப்பில் அந்த Number plate, 10,06,27,248.68 ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆக, Andy2 என்பவர் ஏலத்தில் எடுத்த அந்த ZH 24 என்ற எண் கொண்ட Number plateதான் சுவிட்சர்லாந்திலேயே அதிக விலை மதிப்புள்ள Number plate என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.