;
Athirady Tamil News

அச்சுவேலியில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற அர்ச்சனைப் பூக்கள் இசைப்பேழை வெளியீட்டு விழா

0

அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி மீது ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி பா. அர்ச்சனாவால் எழுதிப் பாடப்பட்ட அர்ச்சனைப் பூக்கள் என்ற இசைப்பேழை வெளியீட்டு விழா 03.07.2024 புதன் இரவு 9.15 மணிக்கு காட்டுமலை கந்தசுவாமி ஆலய முன்றிலில் சப்பரத் திருவிழா நிறைவில் நடைபெற்றது.

மன்னார் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞான. ஆதவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அதிபர் ச. சத்தியவரதன், இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி குமாரசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வரவேற்புரையை அச்சுவேலி மத்திய கல்லூரி அதிபர் கு.ரவிச்சந்திரன் ஆற்றினார். ஆசியுரையை ஆலயபிரதம குரு சீ.சி.சி.. சிவானந்தம் ஐயர் வழங்கினார். யாழ். பல்கலைக்கழக பண்டிதர் கற்கை வருகை விரிவுரையாளர் பண்டிதை தவபாலன் சியாமினி, சைவப்புலவர் கி. வரதராசா ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

அச்சுவேலி நிதர்சன் பாடல்களுக்கு இசை வழங்கி உள்ளார்.

இசைப் பேழையை ஆலய பிரதம குரு சீ.சி.சி. சிவானந்தம் ஐயர் வெளியிட்டு வைக்க செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் பெற்றுக் கொண்டார்.

1929 இல் தமிழ் வழிபாட்டிற்கு முதன்மை கொடுத்து வேலை மூலவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் தற்போது வெளியிடப்பட்ட இசைப்பேழை 10 ஆவது இசைப் பேழை என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.