;
Athirady Tamil News

சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை விதிக்கும் நாடு

0

பாகிஸ்தான் (Pakistan) அரசாங்கம் சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை விதிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தடை ஜூலை 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வாட்ஸ்அப் (whatsup) பேஸ்புக் (facebook) டிக்டொக் (tiktok) இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் (x) போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகி உள்ளது.

அமைச்சரவை குழு பரிந்துரை
முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ஆம் திகதி முதல் ஜூலை 18-ஆம் திகதி வரை பஞ்சாப் மாகாணத்தில் தடை விதிக்க வேண்டும் அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் (Maryam Nawaz) சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் (Punjab) அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது.

ஏப்ரல் 2022-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து இராணுவம் மற்றும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.