;
Athirady Tamil News

கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு: வெளிவரும் புதிய தகவல்

0

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் வலராற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள லேபர் கட்சி, மிக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது.

அமைச்சரவையில் யார் யாருக்கு
லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு வர இருக்கிறார். இந்த நிலையில், அவரது அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு என்பது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளது.

ஆனால் புதிய பிரதமருக்கு இது பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் கண்டிப்பாக Angela Rayner, Rachel Reeves மற்றும் லேபர் கட்சியின் எதிர்காலப் பிரதமராக வர வாய்ப்புள்ள Wes Streeting ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வம்சாவளி Lisa Nandy
அத்துடன் மிக விரைவில், தமது அமைச்சரவையில் அனுபவம் மிகுந்த பல உறுப்பினர்களை அவர் உட்படுத்துவார் என்றும் கூறுகின்றனர்.

மேலும், தற்போது அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் Yvette Cooper, David Lammy, Bridget Phillipson, Louise Haigh, Emily Thornberry மற்றும் இந்திய வம்சாவளி Lisa Nandy உள்ளிட்டவர்கள் அமைச்சர் பொறுப்புக்கு வருவார்கள் என்றே லேபர் கட்சி தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.