நிரந்தர நியமனம் கோரி அமைச்சர் டக்ளசை சந்தித்த சுகாதார தொண்டர்கள்!
நிரந்தர நியமனம் இன்றி தொண்டர் அடிப்படையில் யாழ் போதான வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சிற்றூழியர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது நிரந்தர நியமனம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்
இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமையை கவனத்தில் கொண்டு புதிய நியமனங்களை வழங்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதனை தெளிவுபடுத்திய அமைச்சர், எவ்வாறாயினும் எதிர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதேநேரம் பல வருடங்களாக நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில், யாழ் போதான வைத்தியசாலையில் பல்வேறு அலகுகளில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.