1,700 ரூபாய் சம்பளம் குறித்து இராதாகிருஷ்ணன் வெளியிட்ட தகவல்
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (05) நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூபா 1,700 ஆக அதிகரிப்பது தொடர்பில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்தது.
முட்டாள்தனமான செயற்பாடு
கம்பனிகளோடு எந்தவொரு பேச்சுவாரத்தையும் செய்யமால் வர்த்தமானி வெளியிட்டது ஒரு முட்டாள்தனமான செயற்பாடு இது தோட்ட தொழிலாளர்ககளை ஏமாற்றம் செயற்பாடகவே உள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பு விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எனது எங்கள் அனைவரினதும் ஆசையாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.