மங்கோலிய பிரதமராக மீண்டும் ஒயுன் எர்டீன் தேர்வு
மங்கோலியா(Mongolia) நாட்டின் பிரதமராக ஆளுங்கட்சி வேட்பாளரான ஒயுன் எர்டீன் (Oyun-Erdene) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மங்கோலியா நாட்டில் கடந்த மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.
குறித்த தேர்தலில், மொத்தம் உள்ள 126 இடங்களில் ஆளுங்கட்சியான மங்கோலியா மக்கள் கட்சி 68 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
சிறிய கட்சிகள்
பிரதான எதிர்கட்சியான ஜனநாயக கட்சி 42 இடங்களில் வென்றதோடு, ஏனைய 16 இடங்களில் பல்வேறு சிறிய கட்சிகள் வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஆளுங்கட்சி வேட்பாளரான ஒயுன் எர்டீன், மீண்டும் மங்கோலியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.