கேள்விக்குறியாகியுள்ள பிரித்தானிய பிரதமர் அலுவலக பூனையின் இருப்பு
பிரித்தானியாவின் பிரதமரின் அலுவலம் அமைந்துள்ள டவுனிங் ஸ்ட்ரீட் புதிய பிரதமரை வரவேற்கும் நிலையில் அங்கு வாழும் மிகவும் பிரபலமான குடியிருப்பாளர்களில் ஒருவரைப் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அரசியல் உலகின் விருப்பமான பூனையான -லாரி தி கேட்(Larry the Cat)டேவிட் கேமரூன் பிரதமராக இருந்த காலத்தில் தத்தெடுக்கப்பட்ட பின்னர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக டவுனிங் தெருவில் வசித்து வருகிறது.
இறுதிக் கேள்விகள்
2007 இல் வழிதவறி வந்த இந்த பூனைக்கு 17 வயதாகிறது. லாரி 2011 இல் டவுனிங் ஸ்ட்ரீட் பணியாளர்களால் தத்தெடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் கெமரூனின் குழந்தைகளுக்கான செல்லப்பிள்ளையாக இருந்த லாரி பின்னர், டவுனிங் ஸ்ட்ரீட்டில் மிகவும் பிரியமான உயிரினங்களில் ஒன்றாக மாறியது.
இந்தநிலையில் டவுனிங் ஸ்ட்ரீட்டில் வரும் நாட்களில் பெரும் மாற்றங்கள் வரவுள்ள நிலையில் லாரியின் நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
அதிகாரப்பூர்வமாக, லாரி டவுனிங் தெரு ஊழியர்களுக்கு சொந்தமான நிலையில் அவர்கள் அனைவரும் அதை கவனித்துக்கொள்கிறார்கள்.
2016 இல் தனது பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற டேவிட் கெமரூன், தமக்கான இறுதிக் கேள்விகளின் போது லாரி ஒரு அரசு பணியாளர் என்றும், தனிப்பட்ட சொத்து அல்ல என்றும் விளக்கினார்.
எனவே இந்த பூனை பிரதமர் பதவி மாற்றத்திற்குப் பின்னர டவுனிங் ஸ்ட்ரீட்டை விட்டு வெளியேறாது. அங்கேயே தங்கியிருக்கும் என்று கெமரூன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.