செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ரிஷி சுனக்கை கலாய்த்த யூடியூபர்!
பிரித்தானியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது.
குறித்த வாக்கு எண்ணிக்கையில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார்.
இதேவேளை, தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ரிஷி சுனக் செய்தியாளர்களிடம் பேசிய போது, யூடியூபரால் கிண்டலுக்கு ஆளான சம்பவம் அரங்கேறியது.
செய்தியாளர்களிடம் ரிஷி சுனக் பேசி வந்த போது, யூடியூபில் பிராங்க் செய்யும் நிகோ ஓமிலனா தனது கையில் L (தோல்வியாளர் என்பதை குறிக்கும் வகையில்) என்ற ஆங்கில எழுத்து கொண்ட காகிதத்தை தூக்கி காண்பித்தார்.
இதைத் தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் “இதை பிடித்துக் கொள்ளுங்கள் ரிஷி, உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் இவர் 7.49 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்திருக்கிறார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் தனித்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் என்பதால், பிரதமர் பேசிய மேடை அருகே எளிதில் சென்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது.