;
Athirady Tamil News

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: அங்கஜன் விடுத்துள்ள கோரிக்கை

0

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி வைத்தியசாலையில் பதவி வழங்கப்படாத நிர்வாக தரம் அற்றவர்கள் தான் குழப்பங்களை தூண்டுகின்றார்களோ என்பதை ஆராய வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,

”சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் என்பவர் சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக சில தரப்பினரால் அழுத்தங்கள் வழங்கப்படுவதாகவும், அவரது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் வெளிவந்த செய்திகள் தொடர்பில் கடந்த இரு நாட்களாக நான் எனது கவனத்தை செலுத்தியிருந்தேன்.

அதன்படி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை ஆரம்பித்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமையும், வளங்கள் வீணாக்கப்பட்டுள்ளமையும், உரிய வளங்களை பெற்றுக்கொள்வதில் அசண்டையீனத்தை அப்போதைய அத்தியட்சகர்கள் கொண்டிருந்தமையும் தெரியவந்துள்ளது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.