ஈரான் அதிபர் தேர்தல்: மசூத் பெசெஷ்கியன் அமோக வெற்றி
ஈரான் (Iran) அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் ( Masoud Pezeshkian) வெற்றிபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தலின் இரண்டாம் சுற்றின் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் மசூத் பெசெஷ்கியானிற்கு 53வீத வாக்குகள் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அதிபர் தேர்தலில் அவர் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்ராகிம் ரைசி
அந்தவகையில், ஈரான் தலைநகரிலும் ஏனைய நகரங்களிலும் புதிய அதிபரின் ஆதரவாளார்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மேலும், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) கடந்த மாதம் 19 ஆம் திகதி விபத்தில் உயிரிழந்ததையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.