;
Athirady Tamil News

பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு: புலம்பெயர்ந்தோருக்கு நல்ல செய்தியா?

0

பிரித்தானியாவின் புலம்பெயர்தல் ஒரு முக்கிய பிரச்சினையாக கருதப்படுவதையும், தேர்தல் முடிவுகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.

முன்னாள் பிரதமர் ரிஷி, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, ரிஷி, ருவாண்டா நாடுகடத்தல் திட்டத்தை முன்வைத்தார்.

கெய்ர் ஸ்டார்மரோ, தான் பிரதமரானால் ருவாண்டா திட்டத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆக, பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்தால், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும், புலம்பெயர்வோருக்கும் நல்லது நடக்குமா?

புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் கூறுவதென்ன?

பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, லேபர் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது என்பதற்காக, புலம்பெயர்தல் சார்ந்த அரசியலின் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தமில்லை என்று கூறும் Amnesty International என்னும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பிரித்தானிய பிரிவின் இயக்குநரான Steve Valdez-Symonds, அது கவலைக்குரிய விடயம்தான் என்கிறார்.

என்றாலும், ஏற்கனவே புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்துவரும், அதாவது, புகலிடக்கோரிக்கையாளர்கள் நடத்தப்படும் விதத்திலாவது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் இருக்கும் என்பதே வரவேற்கத்தக்கதுதான் என்கிறார் அவர்.

ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சியின் ’Stop the Boats’ என்னும் சுலோகம் அக்கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத்தரவில்லை என்பது உண்மைதான். ஸ்டார்மரோ ருவாண்டா திட்டத்தை ரத்து செய்வதாகக் கூறியுள்ளார்.

புதிய அரசைப் பொருத்தவரை, ஏற்கனவே பிரித்தானியாவுக்கு வந்துவிட்ட புலம்பெயர்ந்தோரை, அதாவது, புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம் கைவிடப்பட்டாலும், புதிதாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துவருவோரைத் தடை செய்ய லேபர் அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்னும் கவலை உள்ளதை மறுப்பதற்கில்லை என்கிறார் Steve.

புதிய பிரதமருக்கு காத்திருக்கும் சவால்கள்

முந்தைய அரசின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்று, புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படுவதை தடுத்து நிறுத்திய தொண்டு நிறுவனமான Care4Calais அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியான Steve Smith, முந்தைய அரசு புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பதில் அலட்சியம் காட்டியதால், புகலிடக்கோரிக்கைகள் எக்கச்சக்கமாக குவிந்துள்ளதாகவும், தங்கள் கோரிக்கைகள் என்ன ஆயிற்று என்றே தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காகவும் புதிய பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது என்கிறார்.

ஆக, புதிய அரசும் புலம்பெயர்தல் விடயத்தில் கடுமையற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கமுடியாது என்று கூறும் புலம்பெயர்தல் அமைப்பு ஆதரவாளர்கள், அதே நேரத்தில், பாதுகாப்பு கருதி இந்நாட்டுக்கு ஓடிவருவோரை கருணையுடன் அணுகி, அவர்கள் பிரித்தானிய மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ வழி செய்யும் வகையில், ஸ்டார்மர் அரசு உள்துறை அலுவலகத்தின் கொள்கைகளை மாற்றியமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.