ரோலக்ஸ் திருட்டு… வெளிநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய பிரித்தானிய இளைஞர் விடயத்தில் புதிய திருப்பம்
ஸ்பெயின் நாட்டில் பிரபலமான தீவு ஒன்றில் மாயமான பிரித்தானிய இளைஞர் 12,000 பவுண்டுகள் மதிப்பிலான ரோலக்ஸ் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகம் எழுப்பட்டுள்ளது.
நண்பர்களிடத்தில் ரோலக்ஸ் தொடர்பில்
குறித்த குற்றச்சாட்டை விசாரிக்கும் கட்டாயத்திற்கு தற்போது பொலிசார் தள்ளப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, 19 வயதேயான ஜே ஸ்லேட்டர் மாயமாவதற்கு முன்னர் தமது நண்பர்களிடத்தில் ரோலக்ஸ் தொடர்பில் பகிர்ந்து கொண்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தை விசாரிக்கும் முடிவுக்கு இதுவரை பிரித்தானியா பொலிசார் எட்டவில்லை என்றும், டெனெரிஃப்பில் உள்ள பொலிசார் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும் மறுத்துள்ளனர்.
மட்டுமின்றி, ரோலக்ஸ் விவகாரத்தில் தொடர்புடைய மர்ம நபர் குறித்த தகவல்களை ஏற்கனவே உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அந்த நபருக்கும் தற்போது டெனெரிஃப்பில் திடீரென்று மாயமாகியுள்ள ஜே ஸ்லேட்டருக்கும் தொடர்பிருப்பதும் அம்பலமாகியுள்ளது.
ஜே ஸ்லேட்டர் மாயமானது, அவர் தங்கியிருந்த Airbnb-ஐ வாடகைக்கு எடுத்திருந்தவர் போதைப்பொருள் வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட அயூப் காசிம் என்பது, ரோலக்ஸ் விவகாரம் என அடுக்கடுக்காக பல சம்பவங்கள் வெளிவந்தும், ஸ்பெயின் பொலிசார் முறையாக விசாரிக்கத் தவறியதாகவே கூறுகின்றனர்.
ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை
மேலும், இந்த விடயத்தில் உண்மை வெளிவர பிரித்தானிய பொலிசார் நடவடிக்கை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஜே ஸ்லேட்டர் ஸ்பெயின் நாட்டில் மாயமானாலும், அவர் குறுக்கிட்ட அனைவரும் பிரித்தானியர்கள் என்றே கூறுகின்றனர்.
இருப்பினும், ஜே ஸ்லேட்டர் விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்க போதுமான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்றே ஸ்பானிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
ஜூன் 17ம் திகதி ஜே ஸ்லேட்டர் மாயமாகும் முன்னர் கடைசியாக அவரது காதலி Lucy Mae Law என்பவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன் பின்னர் அவர் மாயமானதாக கூறப்படுகிறது.
சுமார் 2 வாரம் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிசார், தற்போது கைவிட்டுள்ளனர். இருப்பினும், ஜே ஸ்லேட்டரின் பெற்றோர் தற்போது டெனெரிஃப்பில் தங்கியிருந்து தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.