;
Athirady Tamil News

கனடாவின் மிகப்பாரிய குழந்தைகள் துஷ்பிரயோக வழக்கு: ரூ.2314 கோடி இழப்பீடு

0

கனடாவின் மிகப்பாரிய குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டலில், பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபை இழப்பீடு அறிவித்துள்ளது.

கிழக்கு கனடாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளான நூற்றுக்கணக்கானவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபை 104 மில்லியன் கனேடிய டொலர்களை ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.2314 கோடி) வழங்கும் என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை அமெரிக்க டொலர்களில் 76 மில்லியன் இருக்கும்.

2020-ஆம் ஆண்டில், செயின்ட் ஜான் பேராயர் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாகக் கண்டறியப்பட்டது.

கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்தில் அமைந்துள்ள மவுண்ட் கேஷல் அனாதை இல்லத்தில் நடந்த இந்த ஊழல் கனடாவின் மிகப்பாரிய சிறார் துஷ்பிரயோக சுரண்டலாகக் கூறப்படுகிறது.

இந்த குழந்தைகள் காப்பகம் தற்போது மூடப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக தொடர்ந்த துஷ்பிரயோகம்
1940 களில் தொடங்கி பல தசாப்தங்களாக, அனாதை இல்லத்தில் பாதிரியார்கள் மற்றும் பிற தேவாலய அதிகாரிகளால் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்தது.

மொத்தம் 291 பாதிக்கப்பட்டவர்களுக்கு 55,000 முதல் 850,000 கனேடிய டொலர்கள் வழங்கப்படும் என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் என்ற கணக்கியல் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தீர்மானிக்க மூன்றாம் தரப்பு நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.