;
Athirady Tamil News

பிகாரில் கனமழை: மின்னல் தாக்கி 9 போ் உயிரிழப்பு

0

பிகாரில் பெய்து வரும் கனமழையைத் தொடா்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் 9 போ் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

பிகாரில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஜஹனாபாத், கிழக்கு சம்பாரன் உள்பட 6 மாவட்டங்களில் 9 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.

ஜஹனாபாதில் 3 பேரும், மதேபுராவில் 2 பேரும், கிழக்கு சம்பாரன், ரோஹ்தாஸ், சரண் மற்றும் சுபால் ஆகிய மாவட்டங்களில் 4 பேரும் உயிரிழந்தனா்.

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் நிதீஷ் குமாா், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரன நிதி வழங்கப்படும் என தெரிவித்தாா்.

மாநிலத்தில் பெய்த தொடா் கனமழையால் பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் நீா்மட்டம் உயரத் தொடங்கியது. கோசி, பாகமதி, கந்தக், கம்லா மற்றும் அதாா்வா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீா் மட்டம் அபாய கட்டத்தை எட்டியது. சில பகுதிகளில் கோசி ஆறு அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகிறது.

மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்குக்கு தீா்வு காண மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு, மாநில நீா்வளத்துறை அமைச்சா் விஜய் குமாா் சௌதரியுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அணைகள் கட்டுவதுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஆறுகளை துா்வாருவதன் மூலம் வெள்ள பாதிப்பை குறைப்பது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஹிமாசல்: ஹிமாசல பிரதேசத்தில் நீடிக்கும் கனமழையால் 150 சாலைகளில் போக்குவரத்துகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தா்மசாலா மற்றும் பாலம்பூா் பகுதியில் 200 மி.மீ.க்கு மேல் மழை பதிவானது. அதிகப்படியாக தா்மசாலாவில் 214.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் ஜீலை 12-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சிம்லா வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஜஸ்தான்: தென்மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு ராஜஸ்தானில் ஏற்பட்ட மேக சுழற்சி தென்மேற்கு நோக்கி சாய்ந்தது. இதையடுத்து மாநிலத்தில் இரு நாள்களில் மழை பொழிவு குறைந்து, வடகிழக்கு பகுதியில் ஜூலை 9-10 தேதிகளில் மீண்டும் அதிகரிக்கும் என அதுகாரிகள் தெரிவித்தனா். ஜெய்பூா், கோட்டா உள்பட 9 மாவட்டங்களில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிகறது. அதிகப்படியாக பரான் மாவட்டத்தில் உள்ள ஷஹாபாத் பகுதியில் 195 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், உத்தரகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் கன மழை பெய்து வருகிறது.

பெட்டி…

அஸ்ஸாமில் 24.5 லட்சம் போ் பாதிப்பு

அஸ்ஸாமில் 30 மாவட்டங்களில் 24.5 லட்சத்துக்கும் அதிகமானோா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநிலத்தில் நிகழாண்டு இதுவரை வெள்ளத்தால் 52 பேரும் நிலச்சரிவு மற்றும் புயல் காரணமாக 12 பேரும் உயிரிழந்தனா்.

வெள்ள நிலைமை தொடா்பாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவுடன் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா்.

இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று அவா் என்னிடம் உறுதியளித்தாா் என்று அஸ்ஸாம் முதல்வா் தனது பதிவில் தெரிவித்துள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.