;
Athirady Tamil News

முதியோர்களுக்கு மாதம் ரூ.5000; அரசின் அசத்தல் திட்டம் – எப்படி பெறுவது?

0

முதியோர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மாத ஊதியம்
மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பிரதமர் மோடியால் 2015-ல் தொடங்கப்பட்டது. அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முதியோர்களுக்கு நிதியுதவி வழங்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சேருவதன் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம். ஒரு திட்டத்தில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்
பலன் பெற விரும்பும் நபரின் வயதுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தி ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000, ரூ.5000 ஓய்வூதியமாக பெறலாம். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். 18 வயது நிரம்பிய ஒருவர் சேர்ந்தால் மாதம் ரூ.42 முதல் ரூ.210 வரை செலுத்தலாம்.

60 வயது வரை மாதம் ரூ.210 செலுத்தி வந்தால், ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். 40 வயதான ஒருவர் மாதம் ரூ.1,454 பிரீமியம் செலுத்த வேண்டும். அப்போதுதான் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் பெற முடியும்.

ஓய்வூதியம் குறைவாக இருந்தால் சரி என்று நினைத்தால் குறைந்த பிரீமியத்திலும் செலுத்தலாம். பிரீமியம் நிலை ரூ.291 முதல் ரூ.1,454 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.