;
Athirady Tamil News

பிரான்ஸ் தேர்தல்… தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம்: போராடத் துணிந்த இசைக்கலைஞர்கள்

0

பிரான்சில் தீவிர வலதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், தற்போது துணிந்து போராட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இசைக்கலைஞர்கள் களமிறங்கியுள்ளனர்.

தீவிர வலதுசாரிகள் கூட்டணியே ஆட்சி
மொத்தமாக 1200க்கும் மேற்பட்ட பலதுறை இசைக்கலைஞர்கள் ஒன்று திரண்டு, அரசியல் விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். பிரான்ஸ் தேர்தலின் இரண்டாவது சுற்று ஞாயிறன்று முன்னெடுக்கப்படுகிறது.

பெரும்பாலும் National Rally தலைமையிலான தீவிர வலதுசாரிகள் கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் பதிவு செய்துள்ளன. கடந்த ஞாயிறன்று நடந்த முதற்கட்ட தேர்தலில் 33 சதவிகித வாக்குகள் பெற்று National Rally கூட்டணி முதலிடத்தை தக்கவைத்தது.

இரண்டாமிடத்தில் தீவிர இடதுசாரிகள் உள்ளனர். மூன்றாவது இடத்திற்கு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று நடக்கும் இரண்டாவது சுற்று தேர்தலில், இமானுவல் கட்சி வேட்பாளர்கள் களம் காண வாய்ப்பில்லை.

இந்த நிலையிலேயே பிரான்சின் இசைக்கலைஞர்கள் ஒன்று திரண்டு, தீவிர வலதுசாரிகளின் ஆட்சி நாட்டிற்கு தேவையில்லை என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளனர்.

புதன்கிழமையே இசைக்கலைஞர்கள் அமைப்பு திரளான மக்கள் முன்பு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன், இசை நிகழ்ச்சிகளும் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரேசில் நாட்டின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ராய் என்பவர் ஜெய்ர் போல்சனாரோ தலைமையிலான தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்த அனுபவத்தைப் பற்றி பேசினார்.

அச்சம் கொள்ள வைத்துள்ளது
மட்டுமின்றி, பிரபலமான பல பிரான்ஸ் இசைக்கலைஞர்கள் National Rally கூட்டணியின் ஆதிக்கம் தொடர்பில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஆனால் வெளிப்படையாக எவரும் தங்கள் கருத்தை வெளியிட தயங்கி வருகின்றனர்.

Le Kaiju மற்றும் Sujigashira போன்ற இசைக்கலைஞர்கள் தெரிவிக்கையில், பிரான்சில் தீவிர வலதுசாரிகளின் எழுச்சியை அடுத்து இனவெறி மற்றும் தன்பாலின எதிர்ப்பின் ஆபத்தான அலை ஏற்கனவே உணரப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நமது நாட்டில் பாசிசத்தின் எழுச்சி என்பது புதிதல்ல, ஆனால் இந்த தருணத்தில் பிரான்சில் பிறந்து வளர்ந்தவர்களையே, அவர்களின் எழுச்சி அச்சம் கொள்ள வைத்துள்ளது என Le Kaiju தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 18 முதல் 34 வயதுடைய வர்களின் வாக்கு இடதுசாரிகள் பக்கம் சாய்ந்துள்ளதாக முதற்கட்ட வாக்குப்பதிவில் இருந்து தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர்.

இதனால் பிரெஞ்சு தேர்தலில் இறுதி வாக்கெடுப்பில் இளைஞர்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.