;
Athirady Tamil News

இளம் வயதினர் இனி இணையத்தில் அதை பார்வையிட முடியாது: அமுலுக்கு வரும் கடவுச்சீட்டு

0

இளம் வயதினர் இணையத்தில் ஆபாசப் படங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஸ்பெயின் நாடு புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு
குறித்த செயலி அல்லது கடவுச்சீட்டால் இனி ஆபாசப் படங்களை அணுகுவோரின் வயதை உறுதி செய்யலாம் என்பதுடன், அவர்கள் செலவிடும் நேரத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்றே கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் ஆபாசப் படங்களுக்கு எதிராக பரப்புரை முன்னெடுத்துவரும் Dale Una Vuelta என்ற குழுவினரின் முயற்சியே இந்த திட்டம். இவர்கள் முன்னெடுத்த ஆய்வுகளில், சிறார்கள் மற்றும் இளம் வயதினரிடையே ஆபாசப் படங்களை அணுகுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டது.

வெளியான தரவுகள் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்பானிய பிரதமர் Pedro Sanchez, நாட்டில் 15 வயதிற்குட்பட்ட இளம் வயதினர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்த மாயவலையில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே, pajaporte என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கடவுச்சீட்டை அறிமுகம் செய்ய உள்ளனர். குறித்த செயலி இனி இணையப் பயனர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களா அல்லது உட்பட்டவர்களா என்பதை உறுதி செய்யும்.

30 புள்ளிகள் அளிக்கப்படும்
அரசாங்கம் அளித்துள்ள 5 அடையாள அட்டைகளில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுடன், அந்த செயலி ஒப்பிட்டு உறுதி செய்யும். இதனையடுத்து 30 புள்ளிகள் அளிக்கப்படும். இதன் காலாவதி ஒரு மாதகாலம்.

குறித்த புள்ளிகளை பயன்படுத்தி ஆபாச தளங்களை பார்வையிடலாம். பயனர்கள் தேவையெனில் கூடுதல் புள்ளிகளுக்கும் கோரிக்கை வைக்கலாம். இந்த கோடைகாலத்தின் இறுதியில் தொடர்புடைய செயலியை அறிமுகம் செய்ய உள்ளனர்.

ஆனால் சில தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும், ஸ்பானிய அரசாங்கம் இந்த திட்டத்தை முன்னெடுக்கவே முடிவு செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.