கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கு முக்கிய பொறுப்பு
பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் வியாழக்கிழமை பதவியேற்கிறார்.
இதனிடையே, அவரது கேபினட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவரை அமைச்சராக நியமித்துள்ளார்.
அவரது புதிய பிரித்தானிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர் லிசா நேண்டி (Lisa Nandy) இடம்பிடித்துள்ளார். மேலும், கெய்ர் ஸ்டார்மர் அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார்.
யார் இந்த லிசா நேண்டி?
மான்செஸ்டரில் பிறந்த லிசா நேண்டி, வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள விகான் தொகுதியில் தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வென்றுள்ளார்.
கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள லிசாவிற்கு, கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று துறைகளின் பொறுப்பு லிசா நேண்டியின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.
லிசா நேண்டி இப்போது கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவையின் கீழ் கலாச்சார செயலாளராக பணியாற்றவுள்ளார்.
கலாசார, ஊடகத்துறை மற்றும் விளையாட்டுத் துறையின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இந்த அமைச்சுப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை என லிசா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரக்பி லீக் முதல் ராயல் ஓபரா வரை, நமது கலாச்சார மற்றும் விளையாட்டு பாரம்பரியம் நாடு முழுவதும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் பரவியுள்ளது. இந்த மரபை முன்னெடுத்துச் செல்லும் பணி விரைவில் செய்யப்படும் என லிசா நந்தி உறுதி அளித்துள்ளார்.