கணவன்-மனைவி மீது மோதிய BMW கார்: மும்பையில் அதிகாலை நடந்த பயங்கரம்!
மும்பையில் நேற்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
BMW கார் விபத்து
மும்பையின் வொர்லி பகுதியில் இன்று அதிகாலை வேளையில் நடந்த வாகன விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவேரி நக்வா மற்றும் பிரதிக் நக்வா தம்பதியினர் சிக்கி கொண்டனர்.
வேகமாக வந்த BMW கார் அவர்களது வாகனத்தை பின்னால் இருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மீன் வாங்கி விட்டு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அத்துடன் விபத்துக்குள்ளான பெண் 100 அடி தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்தை விட்டு கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார் என தெரியவந்துள்ளது.