தொல்லை செய்யும் மேலதிகாரிகளை ஒன்லைனில் விற்பதாக விளம்பரம்! வைரலான பதிவுகள்
சீன மக்கள் தங்கள் மேலதிகாரிகளை ஒன்லைனில் விற்பதாக விளம்பரம் செய்துள்ளது வைரலாகியுள்ளது.
தொல்லை தரும் மேலதிகாரிகள்
தமக்கு பிடிக்காத வேலையை செய்பவர்களில் பலர் மனசோர்வுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.
அதேபோல் பணிபுரியும் இடத்தில் தொல்லை தரும் மேலதிகாரிகளை சமாளிக்கவும் பல ஊழியர்கள் திணறி வருவதும் நடைமுறையில் உள்ளது.
ஆனால், சீன மக்கள் தங்கள் மேலதிகாரிகள் மூலம் ஏற்படும் மனசோர்வை குறைக்க கையில் எடுத்திருக்கும் வழிமுறை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
E-commerce எனும் பழைய பொருட்களை வாங்கும் வலைத்தளத்தில், தங்களுக்கு பிடிக்காத அல்லது தொல்லை தரும் மேலதிகாரிகளையும், பிடிக்காத வேலையையும் சீனர்கள் விற்பதாக பதிவிடுகின்றனர்.
மனசோர்வை குறைக்க
அவர்களில் ஒரு நபர் மாதம் 33,000 ரூபாய் ஈட்டித்தரும் வேலையை 91,000 ரூபாய்க்கு விற்பதாகவும், நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 3 மாதங்களில் திருப்பி எடுத்துக் கொள்ளலாம் என கிண்டலாக பதிவிடுகிறார்.
மற்றொரு நபரோ, அவருக்கு தொல்லை தரும் சக ஊழியரை 45,000 ரூபாய்க்கு விற்பதாக பதிவிட்டுள்ளார். அத்துடன் அவரை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை தானே கற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சீனர்கள் செய்யும் இவையெல்லாம் மனசோர்வை குறைக்க விளையாட்டாக செய்யும் விடயம் என்கிறார்கள். ஒருவேளை இந்த விளம்பரங்களை பார்த்து யாராவது முன்வந்தால், அவர்கள் அந்த பதிவை அழித்து விடுவார்கள். மேலும் இதன்மூலம் பரிவர்த்தனையும் செய்யக் கூடாது.