;
Athirady Tamil News

பிறந்து 15 நாட்களேயான மகளை… ஆசிய நாட்டவர் ஒருவர் செய்த நடுங்கவைக்கும் செயல்

0

பாகிஸ்தான் நாட்டில் பிறந்து 15 நாட்களேயான சொந்த மகளை உயிருடன் புதைத்த கொடூரத்திற்கு தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சாக்குப்பையில் வைத்து
பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் அமைந்துள்ள தருஷா பகுதியிலேயே தொடர்புடைய நடுங்கவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் தய்யாப் என்பவரை கைது செய்துள்ள பொலிசார், தனது இக்கட்டான நிலை தொடர்பில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடுமையான பொருளாதர நெருக்கடி காரணமாக, தமது பச்சிளம் குழந்தைக்கு உரிய சிகிச்சையளிக்க முடியாமல் போனதால், வேறுவழியின்றி, உயிருடன் புதைத்துள்ளதாக தய்யாப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சாக்குப்பையில் வைத்து குழந்தையை அடக்கம் செய்துள்ளதையும் தய்யாப் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தய்யாப் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

தாயார் அளித்த புகார்
மேலும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, உடற்கூறு ஆய்வுகள் மூலமாக தடயவியல் பரிசோதனைக்காக குழந்தையின் கல்லறை திறக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, லாகூர் பகுதியில் தம்பதி ஒன்று தங்களின் குடியிருப்பில் வேலை பார்த்து வந்த 13 வயது ஊழியரை மிக மோசமாக நடத்தியதுடன், சித்திரவதைக்கும் உட்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் அந்த ஊழியரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் ஹஸாம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி தொடர்பில் நடவடிக்கை தொடரும் என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.