பாரிஸில் வன்முறையை எதிர்கொள்ள தயாரான வணிகர்கள்
பிரான்சில் தேர்தல் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக வெளியாகவுள்ள நிலையில், பாரிஸில் வன்முறையை எதிர்கொள்ள வணிக உரிமையாளர்கள் தயாராகியுள்ளனர்.
பதற்றமான சூழல்
பிரான்ஸ் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரண்டாம் சுற்று முடிவில் தீவிர வலதுசாரிகள் கூட்டணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டனர். இது அதன் தலைவர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், வேட்பாளர்கள் பலர் இனரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளானதால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வன்முறையை எதிர்கொள்ள தயாராகும் பாரிஸ்
இந்த நிலையில், தலைநகர் பாரிஸில் உள்ள வணிக உரிமையாளர்கள் வன்முறையை எதிர்கொள்ள தயாராகும் வகையில், தங்கள் கடைகளுக்கு உலோகத் தகடுகளைக் கொண்டு வேலி போன்று அமைத்து வருகின்றனர்.
Champs-Elyseesயில் சாத்தியமான குழப்பத்தில் இருந்து கடைகளின் ஜன்னல்களை பாதுகாக்க தொழிலாளர்கள் மரத்தாலான Panels-ஐ பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. முதல் சுற்றின் ஆரம்ப முடிவுகள் பல இடங்களில் அமைதியின்மை மற்றும் அழிவைத் தூண்டிய பின்னர், கடை உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.