;
Athirady Tamil News

பிரான்ஸ் பிரதமராக இடதுசாரிகள் முன்னிறுத்தும் தலைவர்… வெளிவரும் தகவல்

0

பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மூன்று கூட்டணிகளும் அறுதிப்பெரும்பான்மையை எட்டாத நிலையில், குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.

பிரதமராக யாரை வேண்டுமானாலும்
தீவிர வலதுசாரிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், Marine Le Pen தலைமையிலான National Rally கட்சி 143 ஆசனங்கள் மட்டுமே பெற்று மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாரத வகையில் இடதுசாரிகள் கூட்டணி 182 ஆசனங்களை வென்றுள்ளது. பொதுவாக அரசியலமைப்பின் படி ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாட்டின் அடுத்த பிரதமராக யாரை வேண்டுமானாலும் தெரிவு செய்யலாம்.

ஆனால் இதுவரையான நடைமுறையின் படி நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும். இதனால் அதிக ஆசனங்கள் வென்ற கட்சி அல்லது கூட்டணியில் ஒருவர் பிரதமராக பொறுப்புக்கு வருவார்.

தற்போது இடதுசாரிகள் கூட்டணி அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களுடன் வென்றுள்ளதால், அவர்களில் ஒருவர் நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவார்.

இந்த நிலையில் தீவிர இடதுசாரிகள் கட்சி LFI தலைவர் Jean-Luc Mélenchon தெரிவிக்கையில், நாட்டை பிரான்சின் இடதுசாரிகள் ஆள்தற்கு தயாராக உள்ளோம், பிரதமர் Gabriel Attal வெளியேறலாம் என தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் ஒருமித்த கருத்தை
இடதுசாரிகளின் New Popular Front கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக LFI இடம்பெற்றுள்ளது. இதனிடையே, LFI நாடாளுமன்ற உறுப்பினர் Clementine Autain மொத்த கூட்டணித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதுடன், திங்களன்று இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மட்டுமின்றி, கூட்டணியின் ஒருமித்த கருத்தை உட்கொண்டு முறையான ஆட்சியை முன்னெடுக்க முன்னாள் சோசலிஸ்ட் ஜனாதிபதி François Hollande அல்லது Jean-Luc Mélenchon ஆகிய இருவரில் ஒருவர் நாட்டின் புதிய பிரதமராக முன்னிறுத்தப்பட வேண்டும் என்று Clementine Autain குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் François Hollande தெரிவிக்கையில், தீவிர வலதுசாரிகளை மக்கள் மூன்றாமிடத்திற்கு தள்ளியது மனநிறைவை அளிக்கிறது. ஆனால் பிரெஞ்சு மக்கள் மீது ஒரு பெரிய பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.