;
Athirady Tamil News

ஆட்சிக்கு வந்து சில நாட்கள்… பிரித்தானியாவில் சுத்தியல் தாக்குதலுக்கு இலக்கான லேபர் எம்.பி

0

பிரித்தானியாவில் லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது வீடு தேடிச் சென்று மர்ம நபர்களால் சுத்தியல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெறுப்பை அம்பலப்படுத்த வேண்டும்
ஆளும் லேபர் கட்சியின் Stretford and Urmston நாடாளுமன்ற உறுப்பினரான Andrew Western என்பவர் மீதே சுத்தியல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் பொலிசாரால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்த Andrew Western, நேற்றிரவு எனது வீட்டில் ஒரு சம்பவம் நடந்தது, இச்சம்பவம் Operation Bridger-ன் ஒரு பகுதியாக காவல்துறையினரால் விசாரிக்கப்படுகிறது.

தற்போது நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் நமது அரசியலில் உள்ள வெறுப்பை நாம் தற்போது அம்பலப்படுத்த வேண்டும். அரசியல்வாதிகள் மீதான துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் துஷ்பிரயோகம் சரியல்ல, அது சாதாரணம் என கடந்து போவதும் முறையல்ல என்றார்.

உழைக்கவும் தயாராக உள்ளேன்
மேலும், நான் Stretford and Urmston தொகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். இயன்ற அளவுக்கு சிறப்பாக அவர்களுக்கு என உழைக்கவும் தயாராக உள்ளேன் என குறிப்பிட்டுள்ள Andrew Western,

விரைவான நடவடிக்கைக்கு கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறைக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார். Operation Bridger என்பது நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையின் திட்டமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.