;
Athirady Tamil News

ஜேர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு அதிக தாமதம்: கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை

0

ஜேர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு வழக்கத்தைவிட அதிக தாமதம் ஏற்படுவதால், சுற்றுலா செல்லும் திட்டத்திலிருப்போர் விரக்தியடைந்துள்ளார்கள்.

இரண்டு மாதங்கள் வரை தாமதம்
வழக்கமாக, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது இரண்டு மாதங்கள் ஆவதாக ஜேர்மன் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன?
இப்படி பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு தாமதம் ஏற்படுவதற்குக் காரணம், தேசிய அச்சடிப்பு சேவைதான் என்று பாஸ்போர்ட் அலுவலக மூத்த அதிகாரியான Helmut Dedy என்பவர் தெரிவித்துள்ளார். அவர்களுடைய தவறுக்கு, தங்கள் அலுவலக ஊழியர்கள் மக்களுடைய கோபத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறை கட்டணம் செலுத்தும் நிலை
இதற்கிடையில், பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்த பலர், விடுமுறையைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, எக்ஸ்பிரஸ் டெலிவரியையாவது பெறலாம் என எண்ணி இரண்டாவது முறை கூடுதல் கட்டணம் செலுத்தியுள்ளார்கள்.

அவர்கள் சுமார் 170 யூரோக்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள Dedy, அப்படி இரண்டு முறை கட்டணம் செலுத்தியுள்ளோரின் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தான் உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.