முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 15ம் திகதி நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், அடுத்தடுத்த கிலோமீற்றர்களுக்கான கட்டணம் 90 ரூபாய் படியும் குறைக்கப்பட்டுள்ளது.