மோடியின் ரஷ்ய விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கோர தாக்குதல்: உக்ரைன் அதிருப்தி
இந்தியாவின் (India) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi ) ரஷ்ய விஜயம் தொடர்பில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதன்போது, இந்திய பிரதமரின் ரஷ்யாவுக்கான (Russia) விஜயமானது, உக்ரைனுடனான சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் இருக்கும் போதே உக்ரைனில் (Ukraine) சிறார் மருத்துவமனை மீது ரஷ்யா கொடூரத் தாக்குதலை மேற்கொண்டது.
மோசமான குற்றவாளி
இந்த நிலையில், உலகின் மிக மோசமான குற்றவாளியை உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் ஒருவர் கட்டிப்பிடிப்பது என்பது பெருத்த ஏமாற்றமாகவும் அமைதி முயற்சிகளுக்கு கிடைத்துள்ள பேரடியென்றும் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 08 ஆம் திகதி ரஷ்யா மேற்கொண்ட கோர தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 37 பேர்கள் ஒரே மருத்துவமனையில் கொல்லப்பட்டனர்.
மோடியின் பயணம்
அத்துடன், குறித்த ஏவுகணை தாக்குதலால் சுமார் 100 இற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு நரேந்திர மோடியின் முதல் ரஷ்ய பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.