;
Athirady Tamil News

பூமிக்கடியில் 50 அடி ஆழத்தில் மருத்துவமனை… அடுத்த போருக்கு தயாராகும் இஸ்ரேல்

0

ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர் ஒருபக்கம் நீடிக்க, இஸ்ரேல் அடுத்த போருக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி
இதன் ஒருபகுதியாக தற்போது இஸ்ரேலின் ரகசிய மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பூமிக்கடியில் 50 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை மற்றும் ரத்த வங்கியானது, இஸ்ரேலின் எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பது தொடர்பில் ரகசியம் காக்கப்படுகிறது.

ஆனால் ரசாயன, ஏவுகணை மற்றும் சைபர் தாக்குதல்களில் இருந்து இந்த மருத்துவமனைக்கு உச்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட அறைகளில் அனைத்து வகையான ரத்தமும் சேமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல நூறு பேர்களுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க போதுமான ரத்தம் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில் மற்றொரு மோதலுக்கான திட்டங்கள் தயாராகி வருவதாகவே கூறப்படுகிறது.

ஹிஸ்புல்லா அமைப்புடனான போர் வெடிக்கும் என்றால், அனைத்து அவசர அழைப்புகளுக்கும் இந்த மருத்துவமனையில் இருந்து பதிலளிக்கப்படும். மிக மோசமான சூழலிலும் இந்த மருத்துவமனை முழுமையாக செயல்படும் என்றே இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேலும் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகளால், நாட்டின் எந்தப் பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என்பதை துல்லியமாக அறிந்து, அப்பகுதிக்கு உடனையே ஆம்புலன்ஸ் சேவையை அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ஒவ்வொரு பகுதிக்கும் வெறும் 5 நிமிடத்தில் அவசர மருத்துவ உதவிக்குழுவினரை அனுப்பி வைக்கும் திட்டமும் தயாராக உள்ளது. மட்டுமின்றி, பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு எட்டாமல் போனால் முறையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் தலைவர்கள் கூறுகின்றனர்.

காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்
இதனிடையே லெபனான் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் இருந்து 80,000 இஸ்ரேலிய மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதே எண்ணிக்கையிலான லெபனான் மக்களும் பாதுகாப்பு கருதி வெளியேறியுள்ளனர்.

ஹமாஸ் படைகளை ஒப்பிடுகையில் ஹிஸ்புல்லா அமைப்பானது பெரும் எண்ணிக்கை கொண்டது என்பதுடன், நவீன ஆயுதங்கள் மற்றும் போர் நெருக்கடிஅக்ளை எதிர்கொண்ட அமைப்பாகும்.

காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் தாங்களும் உடனடியாக போர் நிறுத்தம் செய்துகொள்ள தயார் என ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இதனிடையே, தங்கள் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் படையெடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இரு தரப்புக்கும் இடையேயான போர் இரு தரப்புக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதுடன் முழு பிராந்தியத்தையும் இதில் உட்படுத்தும் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.