பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைய பல மாதமாகலாம்: அரசியல் நிபுணர்கள் சூசகம்
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி அமைய ஓராண்டாகலாம் என அரசியல் நிபுணர்கள் சூசகமாக தெரிவிக்கின்றனர்.
நாட்டில் அரசியல் நெருக்கடி
பிரான்ஸ் தேர்தலில் மூன்று கூட்டணிகள் களம் கண்டதில் எவருக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை மக்கள் அளிக்கவில்லை. அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த தீவிர வலதுசாரிகள் கூடணி, மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
களத்தில் இல்லை என ஒதுக்கப்பட்ட ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கூட்டணி இரண்டாவது இடத்திலும், தீவிர வலதுசாரிகள் கூட்டணியான New Popular Front அதிக ஆசனங்களைக் கைப்பற்றி முதலிடத்திலும் வந்துள்ளது.
ஆனால் ஆட்சியமைக்கும் எண்ணிக்கை New Popular Front கூட்டணியிடம் இல்லை. இந்த நிலையில், 1958க்கு பின்னர் நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் நோகர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜேர்மானியர்கள் அல்லது ஸ்பெயின் அல்லது இத்தாலியர்கள் போல இருவேறு கொள்கை கொண்ட கூட்டணி ஆட்சி என்பது இதுவரை பிரான்சில் உருவானதில்லை.
ஆனால் இந்தமுறை அப்படியான ஒரு தீர்வு எட்டப்படவில்லை என்றால், ஓராண்டுவரையில் புதிய ஆட்சி அமையும் வாய்ப்பு இல்லை என்றே கூறுகின்றனர். அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில், பிரான்ஸ் ஜனாதிபதிக்கு இன்னொரு 12 மாதங்களில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் இல்லை.
கூட்டணிக்கு வாய்ப்பில்லை
இதனால் கொள்கையில் வேறுபடும் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமா என்பதும் சந்தேகம் என்கிறார்கள். இதனிடையே, தீவிர வலதுசாரிகள் கூட்டணிக்குள் கட்சிகளிடையே கருத்துவேறுபாடு எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இமானுவல் மேக்ரான் கூட்டணியானது, தீவிர வாலதுசாரிகளான National Rally மற்றும் தீவிர இடதுசாரிகளான La France Insoumise ஆகிய இருவருடனும் எந்த நெருக்கடியிலும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது.
இந்த La France Insoumise கட்சியானது இடதுசாரிகளின் New Popular Front கூட்டணியில் அங்கமாகும். மேலும், முன்னாள் ஜனாதிபதி François Hollande-வின் சோசலிஸ்ட் கட்சியும் France Insoumise அமைப்பும் கொள்கை ரீதியாக வேறுபாடு கொண்டவர்கள் என்றும்,
தற்போது அவர்கள் ஒரே கூட்டணியில் இருந்தாலும், அவர்களின் அனைத்து முடிவையும் ஏற்றுக்கொள்வது சிரமம் என்றே கூறுகின்றனர்.
பிரான்ஸ் தேர்தலில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டாலும், ஒற்றுமையுடன் காணப்படும் ஒரே கூட்டணி அது Marine Le Pen முன்னெடுக்கும் National Rally என்றே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.