பிரான்சில் பழிவாங்கும் அரசியல் துவங்கியது? வலதுசாரிக் கட்சித் தலைவர் மீது பொலிஸ் விசாரணை
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், முந்தைய கட்சியினரை தூக்கி சிறைக்குள் வைக்கும் அரசியல் பிரான்சிலும் உள்ளதோ என தோன்றுகிறது.
ஆம், ஆட்சியைக் கைப்பற்றும் என நினைத்த வலதுசாரிக் கட்சியைத் தடுக்க பல கட்சிகள் எதிரணியில் நின்று பாடுபட்டு, அக்கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தது மட்டுமல்லாமல், மூன்றாம் இடத்துக்கும் தள்ளிவிட்டார்கள்.
அடிக்கு மேல் அடி
இந்நிலையில், அடிக்கு மேல் அடியாக, ஆட்சி பீடம் ஏறும் கனவு கலைந்தது மட்டுமின்றி, வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியின் தலைவரான Marine Le Penஐ சிறைக்கு அனுப்பவும் முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது.
ஆம், பழைய வழக்கொன்றைக் கிளறி, பொலிசார் National Rally கட்சி மீதும், அக்கட்சியின் தலைவரான Marine Le Pen மீதும் மோசடி வழக்கு விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
என்ன விசாரணை?
2022ஆம் ஆண்டு, மோசடி செய்து ஜனாதிபதியாக முயற்சி செய்ததாக Marine Le Pen மீது வழக்கொன்று உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி செலவுக்காக, National Rally கட்சி, மக்கள் வரிப்பணத்தை திருடியதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு, வரும் செப்டம்பர் மாதம் பாரீஸில் மீண்டும் துவக்கப்பட உள்ளது.
Marine Le Pen மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதுடன், அவர் தேர்தலில் நிற்கவும் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.