பணக்கார நாடுகளிலும் இந்த பிரச்சினைதான்… சுவிஸ் ஏரியில் மனிதக்கழிவுகள்
ஏழை நாடுகள், முன்னேறாத நாடுகள், வளரும் நாடுகளில் மக்கள் நீர்நிலைகளுக்கருகே அசுத்தம் செய்கிறார்கள், நாகரீகம் இல்லை, கழிப்பறை இல்லை என வளர்ந்த நாடுகள் கேலி பேசிய காலகட்டம் இருந்தது.
ஆனால், இன்று பணக்கார நாடுகள், வளர்ந்த நாடுகள், நாகரீகத்தின் உச்சியிலிருக்கும் நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில்கூட, நீர்நிலைகளில் மனிதக்கழிவுகள் காணப்படுவதைக் குறித்த செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.
சமீபத்தில், பிரான்சில், ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெற இருக்கும் நதியில் மனிதக்கழிவுகளில் காணப்படும் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தும் விதிவிலக்கில்லை போலும்
இந்நிலையில், பணக்கார நாடான, சுற்றுலாவுக்குபெயர் பெற்ற நாடான சுவிட்சர்லாந்திலுள்ள ஏரி ஒன்றிலும் மனிதக்கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Valais மாகாணத்தைச் சுற்றியுள்ள ஏரியில் மனிதக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்த ஏரி நீரில் நீந்துவது தொடர்பாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஏரி நீர் பாதுகாப்பானது என முடிவு செய்யப்படும் வரை அந்த ஏரியில் நீந்தவேண்டாம் என Valais நுகர்வோர் விவகாரங்கள் சேவை பொதுமக்களை எச்சரித்துள்ளது.