உணவு பட்டியலில் 16 வகை புழு, பூச்சியினங்களை சேர்ந்த சிங்கப்பூர்!
சிங்கப்பூர் நாட்டில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவு கழகம் (எஸ்.எப்.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது.
விற்பனையை அதிகரிக்க மற்றும் வாடிக்கையாளர்களை கவர இந்த பூச்சிகள் அடங்கிய புதிய மெனுக்கள் உதவும் என உணவு விடுதிகள் மற்றும் கபேக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஒரு சில உணவு விடுதிகள் 30 பூச்சிகள் அடங்கிய டிஷ்களையும் மெனுவில் சுட்டி காட்டியுள்ளது.
அவற்றை சமைத்து, கடல்உணவுகளுடன் சேர்த்து புதிய டிஷ்ஷாகவும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்த சூழலில், உணவு விடுதிகளிடம் தினமும் 5 முதல் 6 முறை தொலைபேசி வழியே வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கின்றனர்.
அவர்கள், பூச்சிகளின் டிஷ்கள் பற்றியும், எப்போது அவற்றை ஆர்டர் செய்யலாம் என்பன விசயங்களை கேட்க தொடங்கி விட்டனர் என கடல்உணவுக்கான விடுதியின் தலைமை செயல் அதிகாரியான பிரான்சிஸ் கூறுகிறார்.
அவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்திருக்கின்றனர்.
அவர்கள், தங்களுடைய ஒரே டிஷ்ஷில் எல்லா பூச்சிகளும் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்றும் பிரான்சிஸ் கூறுகிறார்.