தொடருந்து நிலைய அதிபர்களுக்கு கடுமையான எச்சரிக்கை! பதவி பறிபோகும் அபாயம்
இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான எச்சரிக்கை
அவ்வாறு பணிக்கு சமூகமளிக்கத் தவறினால், அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என்று இலங்கை தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் எச்சரித்துள்ளார்.
இலங்கை தொடருந்து நிலைய அதிபர் சங்கத்தின் தொழில்சார் நடவடிக்கைக்கு துணை நிலைய அதிபர்கள் சங்கமும் ஆதரவளிக்க தயாராகியுள்ளது.
இலங்கை முழுவதிலும் 172 உப நிலையங்கள் உள்ளதாகவும், இந்த தொழில்சார் நடவடிக்கை காரணமாக தொடருந்து நடவடிக்கைகளில் மேலும் பாதிப்புகள் ஏற்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.